"அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை" (ரோமர் 4:19) அல்லேலூயா! விசுவாசத்தின் தந்தை ஆபிரகாமின் தேவனுக்கு மகிமை! அவர் பெற்றிருந்த விசுவாசம் பலவீனமான அல்ல! பலமுள்ள விசுவாசம். அவர் வளர்ந்த குழந்தையைப் போல அது வேண்டாம், இது வேண்டாம் என அடம் பிடிப்பவராகவோ, அல்லது இதுதான் வேண்டும், அதுதான் வேண்டும் என நச்சரிக்கிறவராகவோ அல்ல! புதிதாய்ப் பிறந்த குழந்தையைப்போல, கபடமில்லாமல் தகப்பன் சொல்லும் "அனைத்துக்கும்" கீழ்ப்படிய மனதுள்ளவராக இருந்தார். அதைத்தான் கர்த்தரும் விரும்புகிறார். "தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்".(ரோமர் 4:18) கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் வாக்குத்தத்தங்கள், அல்லது நாம் அவரிடம் விண்ணப்பித்திருக்கும் வேண்டுதல்கள்; எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் விஷேசித்த நன்மைகள், நம் வாழ்வில் நடக்கவும், கிடைக்கவும் ஏதுவில்லாதிருக்கும்போது சூழ்நிலைகளைப் பார்த்து நாம் விசுவாசத்தில் பலவீனமடைந்துவிடுகிறோம். எனவே எதையும் பெற்றுக்கொள்ளாதிருக்கிறோம். ஆபிரகாம் ஐயா வேறு எதுவும் செய்யவில்லை. ஆனால் தன் விசுவாசம் பலவீனமடையாதபடி கர்த்தரை முழுமையாக நம்பிவிட்டார்! பெற்றுக்கொண்டார்! தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம் --பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.(ரோமர் 4: 20,21) நம் இருதயமும் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி வாழுமானால், நாமும் அனேக ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பது நிச்சயம்! விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை விசுவாசத்தில் பலப்படுத்துவாராக! "..(ஆபிரகாம்) விசுவாசத்தில் வல்லவனானான்" (ரோமர் 4:21) ஆமென்! |
0 comments:
Post a Comment